செங்கம் பேரூராட்சி சார்பில் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி விழிப்புணர் பேரணி 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக ஒலிம்பியா 44 சதுரங்க போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க நடக்கவிருக்கும் சதுரங்க போட்டியை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணமாக செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா கொடியசைத்து துவக்கி வைக்க,
முக்கிய சாலைகள் வழியாக சதுரங்க போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என கையில் பதாகைகள் ஏந்தி கொண்டும் முழக்கம் இட்டு மாணவ மாணவியர்கள் பேரணியாக சென்று பின்னர் செங்கம் பேரூராட்சி வளாகத்தில் நிறைவு பெற்றது இந்த பேரணியில் சுமார்500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.