திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பவானியில் திங்கட்கிழமை அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் பவானி நகர அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, மக்கள் விரோத போக்கை கண்டித்து 25-மா தேதி திங்கட்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் திரளாக கலந்து கொள்வது குறித்து முன்னால் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னால் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளரும், பவானி தொகுதி எம்எல்ஏ வுமான கலந்து கொண்டு,

கழக கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு முக்கிய நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி நகரம் ஒன்றியம் மற்றும் பெருந்துறை ஒன்றியம் பேரூர் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் SM தங்கவேலு, பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் M.ஜெகதீசன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் பூதப்பாடி முனியப்பன், அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன், பவானி நகர கழக செயலாளர் M.சீனிவாசன்,
பொதுக்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பூங்கோதை வரதராஜன், மாவட்ட & ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட & ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
