மக்களின் நம்பிக்கையை இழந்த விடியா அரசு கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி.

தமிழக மக்களின் முழு நம்பிக்கையை ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டிலே விடியா அரசு இழந்து விட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் பிரத்யேக பேட்டி தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஜுலை 23 ம் தேதி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கி வரும்போது என்னுடைய வாகனம் காவல் துறையால் தனித்து விடப்பட்டது.
நேற்று முன்தினம் அஞ்சலி நிகழ்ச்சியில் கலவரம் ஏற்படுத்தி தாக்குதல் நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.மாலையில் நடக்க இருந்த புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டத்தை, ஜாதி பிரச்சினைகளை காரணம் காட்டி காவல்துறை தடுத்து விட்டது.
நாட்டு மக்களுக்கு, சட்டம் ஒழுங்கு மற்றும் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற போது தான் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது,
திமுக அரசு ஒரு வருடத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. திராவிட அரசியல் எனக் கூறி அதற்கு எதிராக செயல்படும் புதிய தமிழகம் கட்சியின் செயல்பாடுகளை எதிர்க்குமானால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுக்க தயாராவோம்.
தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்,
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேட்டில் முதல்வர் மற்றும் அவரது மருமகன் குறித்து புகார்கள் கூறப்பட்ட நிலையில், முதல்வரோ மருமகனோ ஏன் விளக்கம் கொடுக்கவில்லை.
நீட் தேர்வு எதிராக குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நீட் தேர்வு எதிர்த்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வும் நடந்து விட்டது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தோற்றுவிட்டது.
ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்து அது எப்படினு எங்களுக்கு தெரியும்னு சொன்னீங்களே இப்போ என்னாச்சி,நீட் தேர்வில் எடப்பாடி அரசு மீது குற்றச்சாட்டு வைத்தீர்களே இப்போ உங்கள் ஆட்சி தானே எங்கே சென்றீர்கள் என்று மக்களை ஏமாற்றிய விடியா அரசை பற்றி குற்றச்சாட்டினை தெரிவித்தார்.