அந்தியூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அந்தியூர் தாலுகா பேரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு எஸ். கீதா தலைமையேற்றார் சங்கத்தின் கொடியை எஸ் ராதா ஏற்றி வைத்தார் வரவேற்புரையாற்றினார் அஞ்சலி தீர்மானத்தை கவியரசி முன்மொழிந்தார் எம் தவமணி ஆர் அன்னக்கொடி யு சத்தியா எம் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர் பேரவையை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் பி லலிதா சிறப்புரை ஆற்றினார்.
தீர்மானங்களை ஏ சங்கீதா முன்மொழிந்தார் கூட்டத்தில் பேரவையின் அந்தியூர் தாலுக்கா புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தாலுகா தலைவராக எம் பழனியம்மாள் துணைத்தலைவராக எஸ் சித்தாயி செயலாளராக எஸ்.கீதா துணைச் செயலாளராக எம் மகேஸ்வரி பொருளாளராக ஏ கீதா ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கமிட்டி உறுப்பினர்களாக எம் தவமணி கே கண்ணாயாள் மீனாட்சி பாலாமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை தடுத்து நிறுத்த வேண்டும் அந்தியூர் தேர் வீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.