அந்தியூர் அருகே பள்ளத்தில் மணல் கடத்திய இருவர் கைது மினிலாரி பறிமுதல்.

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் செலம்பூர் அம்மன் கோவில் பள்ளத்தில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர் தேவராஜ்ஆகியோர் அப்பகுதிக்குச் சென்று பள்ளத்தில் மணல் லாரிக்கு ஏற்றிக் கொண்டிருந்த ஆப்பக்கூடல் ஒரிச்சேரிபுதூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் சின்னராஜ் ஆகியோரையும் மணல் கடத்தலுக்கு ஈடுபடுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து வெள்ளி திருப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இதுகுறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
