பிஎஸ்என்எல் டவர்கள், கேபிள்களை தாரை வார்ப்பதை கண்டித்து அனைத்து பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி அனைத்து மாவட்ட பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தின் சார்பில் நிர்வாகி வில்லியம்ஜெர்ரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பிஎஸ்என்எல் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை அஸ்லம் பாஷா வழங்கினார்.

தொடர்ந்து மத்திய அரசு தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் பிஎஸ்என்எல் டவர்களையும், ofc கேபிள்களையும் தனியாருக்கு தாரை வார்க்ககூடாது,

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவைகளை துவங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சசிக்குமார், சக்திவேல், பழனியப்பன், சுந்தர்ராஜன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
