பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் டைல்ஸ் கம்பெனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டைல்ஸ் கற்களுடன் வந்து விவசாயிகள் வலியுறுத்தல்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

வேளாண் சார்ந்த தொழில்களை தவிர்த்து பிற தொழிற்சாலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விதிக்கு புறம்பாக தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பகுதியில் விளை நிலத்தில் டைல்ஸ் கம்பெனி 32 ஏக்கரில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற விவசாயகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு அம்மாபேட்டை விவசாயிகள் டைல்ஸ் கற்களுடன் வந்து டைல்ஸ் கம்பெனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
