குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தஞ்சை திருவாரூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் யூரியா, டிஏபி உரங்கள் 2645 டன் வந்தது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 4.5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து உரத்தட்டுப்பாடு என்பது நிலவி வந்தது.

விவசாயிகள் கோரிக்கை ஏற்று தமிழக அரசு குருவை தொகுப்பு திட்டத்திற்கு 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது இதில் 100 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா அரை மூட்டை டிஏபி அரை மூட்டை பொட்டாசியம் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில்,

பல பகுதிகளில் இன்னமும் குருவை தொகுப்பு திட்டம் முழுமையாக கொடுக்கப்படாத நிலையில் உள்ளது. தண்ணீர் திறந்து 60 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் உர தட்டுப்பாடு என்பது நிலவி வருகிறது. மகசூல் இழப்பு விவசாயிகளுக்கு பெருமளவு ஏற்படும் உர தட்டுப்பாட்டை போக்கும் வகையில்,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பட்டினம் துறைமுகத்திலிருந்து கூட்ஸ் ரயிலில் 42 வெகெனில் யூரியா டிஏபி உரங்கள் 1300 டன் யூரியா 1345 டன் டிஏபி உரங்கள் தஞ்சை திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தது இது இன்னும் இரு நாட்களில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
