திருவாவடுதுறை ஆதீனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னதியில் பிரதிஷ்டைசெய்யப்பட்ட விநாயகருக்கு 24வது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்வித்தார்.
ஆதீன கட்டளை ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆதீன பணியாளர் குழந்தைகள் 200பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இதில் ஆதீன கட்டளை வேலப்பதம்பிரான், ராமலிங்க சுவாமிகள், ஆதீன மேலாளர் திருமாறன், கண்காணிப்பாளர் சண்முகம், காசாளர் சுந்தரேசன், ஆதீனப்புலவர் குஞ்சிதபாதம், ஆதீன மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஞானமூர்த்தி, ஜெயசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படம்:திருவாவடுதுறை ஆதீனத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில்
ஸ்ரீ ஞானமாநடராஜ பெருமான் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தபோது எடுத்த படம்.