அறங்காவலர் குழு தலைவராக இரா.அருள்முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆளுமைக்கு உட்பட்ட சட்டபிரிவு 46/- ன் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆனை வெளியிடப்பட்டது பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய உரிய பெயர்பட்டியல் தயாரித்து அரசுக்கு அளிக்க 7-உறுப்பினர்களை கொண்ட மாநில குழு ஒன்று அமைத்து ஆனை வெளியிடப்பட்டது.
அதன்படி மாநில குழு அளித்த பரிந்துரையை அரசு பரிசீலித்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலின் பரம்பரை முறைவழி அறங்காவலர்களகா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மானாடு தண்டபத்து பகுதியை சேர்ந்த முன்னால் எம்பி கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், மற்றும் செந்தில் முருகன், ராமதாஸ், அருள் முருகன், கனேசன் உட்பட மொத்தம் 5-பேருக்கு தூத்துக்குடி மண்டல ஆணையர் சங்கர் இன்று திருச்செந்தூ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் வைத்து பதவி ஏற்று வைத்தார்.
இதனை தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் அருள் முருகன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அறங்காவலர்துறை அமைச்சர் சேகர் பாபு வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து திருச்செந்தூர் நகராட்சி தலைவர் கவுன்சிலர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அறங்காவலர் குழு தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது
திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் மெகாத்திட்ட பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் கோவில் கும்பாபிஷேகம் பணிகளும் இணைந்து நடைபெறும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.