தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணை உயிரை குடிக்கும் எமனாக

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணைகளை வைத்துள்ளனர் ஆனால் இதுவே வாகன ஓட்டிகள் உயிரை குடிக்கும் எமனாக மாறி உள்ளது.
இது பற்றி அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த போது அரசு விரைவு பேருந்துகளும் லாரிகளும் வேகத்தை குறைக்காமல் இரும்பு தடுப்பணைகளை கடந்து செல்வதே கரணம் என்கிறார்கள்.
மேலும் இதே பகுதியில் கடந்த மாதம் மட்டும் பேருக்கு மேல் விபத்தில் பலி ஆகியிருப்பதாகவும் மேலும் பலர் காயம் அடைந்திருப்பதாகவும் கூறுகின்றனர் இந்த விபத்துகளை தடுக்க அங்கு இருக்கும் இருக்கும் இரும்பு தடுப்பணைகளை அகற்ற வேண்டும்,
அல்லது அதி வேகமாக செல்லும் அரசு மற்றும் தனியார் விரைவு பேருந்துகளை கணிக்கணித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.