நத்தத்தில் உலக வெறிநோய் தடுப்பு தினம் – சிறப்பு முகாம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கால்நடை மருந்தகம் வேலம்பட்டியில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு நத்தம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம்,தோல் வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் உதவியாளர் செந்தில்குமார், ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
50 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
CATEGORIES திண்டுக்கல்