BREAKING NEWS

தஞ்சை பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்? சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.

தஞ்சை பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயம்? சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.

 

தஞ்சாவூர் பெரியகோவிலில் இந்திரன் கற்சிலை மாயமானதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

 

 

தஞ்சாவூர், பெரியகோவிலில் ராஜராஜன் நுழைவு வாயிலில் இந்திரன் சன்னதி உள்ள சிலை மாயமாகி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

 

இது தொடர்பாக அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், கோவில் பணியாளர்கள்,சிவச்சாரியார்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

 

 

இந்திரன் சிலை தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதன் பிறகே சிலை குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )