BREAKING NEWS

தஞ்சையில் கள்ளக் காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை.

தஞ்சையில் கள்ளக் காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை.

 

தஞ்சை கீழவாசல் ராவுத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). அக்குபஞ்சர் டாக்டர். தஞ்சையில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளன.

 

இந்த சூழ்நிலையில் இவருக்கும் தஞ்சையை சேர்ந்த ஒரு விதவை பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

 

இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு பாலமுருகன் சென்று வந்தார். அந்த பெண்ணிற்கும் 18 வயதில் மகள் உள்ளார். 

 

இந்த சூழ்நிலையில் கள்ளக் காதலியின் மகளான 18 வயது சிறுமிக்கு பாலமுருகன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

 

இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டலும் விடுத்தார். ஒரு கட்டத்தில் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சிறுமி நடந்த விவரங்களை தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

 

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )