செங்கத்தில் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஊத்தங்கரிலிருந்து மாரியப்பன் அவரது மனைவி கண்ணகி மற்றும் பேரக் குழந்தையுடன் உறவினர் விசேஷத்திற்காக மாதிமங்கலத்திற்க்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,
செய்யாற்று மேம்பாலம் அருகே கடை வியாபாரி ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு கடை முன்பு சாலையில் பூசணிக்காய் உடைத்து சாலையிலே விடப்பட்டதால் மாரியப்பன் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் சாலையில் உடைக்கப்பட்டிருந்த பூசணிக்காய் மீது ஏறி இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மாரியப்பன் அவரது மனைவி பேர குழந்தை என மூவரும் கீழே விழுந்த நிலையில் சங்கத்தில் இருந்து கிளையூர் நோக்கி சென்ற அரசு பேருந்து தலை மீது ஏறியதில் கண்ணகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
மாரியப்பன் அவரது பேரக்குழந்தை லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர் பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு சாலைகளில் பூசணிக்காய் உடைக்க கூடாது என பல கட்டுப்பாடுகள் விதித்தும் கடை வியாபாரிகள் சிறிதும் கண்டுகொள்ளாமல் சாலையில் பூசணிக்கா உடைத்ததால் பெண் ஒருவர் பலியான சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.