BREAKING NEWS

அக்டோபர் 14, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடைபெறும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்பு! தஞ்சையில் நடைபெற்ற தெற்கு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு!!*

அக்டோபர் 14, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடைபெறும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்பு! தஞ்சையில் நடைபெற்ற தெற்கு மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு!!*

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டத்தின் மாவட்ட குழு கூட்டம் கடந்த 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் கீழ ராஜ வீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் தி.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் அகில இந்திய மாநாடு நோக்கம் குறித்து விரிவாக பேசினார்.

 

தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளராக கோ. சக்திவேல், மாவட்ட பொருளாளராக ந.பாலசுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சி.சந்திரகுமார் உள்ளிட்ட 16 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விஜயவாடாவில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெறுகிறது.

 

மாநாட்டின் முதல் நாளான அக்டோபர் 14ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பேரணி, மாநாடு நடைபெறுகிறது . இந்த பேரணி மாநாட்டில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 500 பேர் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

தஞ்சாவூர், கும்பகோணம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையுடனும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தை தஞ்சாவூருடனும் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சரும் நான்கு மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும்,

 

இணைக்கும் முடிவு கிடையாது என்று அறிவித்த பின்னரும் தற்போது ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்கள் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துடன் இணைக்கும் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம் கைவிட கேட்டுக் கொள்கிறது ,. தற்போது நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் காரணமாக கொள்முதல் செய்யப்படாமல் பல நாட்களாக திறந்தவெளியில் வீணாகி வருகிறது.

 

17 சதவீத ஈரப்பதம் குறித்த கொள்முதலில் 20% வரை ஈரப்பதம் வைத்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )