BREAKING NEWS

சாதி ரீதியாக பிரித்து ஏமாற்றுகிறது பாஜக நிலக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் பேச்சு.

சாதி ரீதியாக பிரித்து ஏமாற்றுகிறது பாஜக நிலக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் பேச்சு.

 

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை குறிவைத்து ஆசைவார்தை கூறி ஏமாற்றி வருகிறது தமிழகத்தில் பாஜக ஜாதி ரீதியாக மக்களை பிரித்து ஆதாயம் தேடுகிறது, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் நடந்த நிலக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் பேச்சு…

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் தியாகி இம்மானுவேல் சேகர்னாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்,தேவேந்திரகுல வேளாளர் மக்களை எஸ்ஸி பட்டியலில் இருந்து நீக்கி தனியா இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்,

 

 

பூ விவசாயம் நிறைந்த நிலக்கோட்டை பகுதியில் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் குளிர்சாதன கிட்டங்கி அமைக்க வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பொதுக்கூட்டத்திற்கு அதன் தலைவர் எஸ்ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்,மாவட்ட செயலாளர் முத்துராஜா, மாவட்ட இளைஞரனி செயலாளர் பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,தென்மண்டல செயலாளர் மங்கள்ராஜ் பாண்டியன் வரவேற்றார்.

 

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய முத்தரையர் முன்னேற்ற சங்கம்,தமிழர் தேசம் கட்சித்தலைவர் செல்வகுமார் தியாகி இமானுவேல் சோரனாரின் நினைவி நாளை அரசு விழாவாக அறிவிக்க தமிழகரசு ஆவனம் செய்ய வேண்டும்,அம்மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் செய்திடவேண்டும்,

 

மேலும் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை குறிவைத்து ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வருகிறது பாஜக, தமிழகத்தில் பாஜக ஜாதி ரீதியாக மக்களை பிரித்து ஆதாயம் தேடுகிறது என்றார்.

 

இக்கூட்டத்திற்கு ஆத்தூர் ஒன்றிய செயலாளர் விவேக், நிலக்கோட்டை ஒன்றியச்செயலாளர் சூர்யா, நிலக்கோட்டை ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )