மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி வேலை தொடங்கும் நேரத்தை காலை 09 என திருத்தி அமைக்க வலியுறுத்தி பூதலூரில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர், பூதலூர் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணி வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 என திருத்தி அமைக்க வேண்டும்,
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை உருவாக்கியுள்ள செயலியை நீக்க வேண்டும், வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்களுக்கு 100 நாள் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்,
வேலை வழங்க முடியாத நாட்களுக்கு சட்டப்படியான இழப்பீடு வழங்க வேண்டும், நீர்வழி கரைகளில் வசித்து வரும் குடும்பங்களை ஆக்கிரமிப்பு அகற்றுதல் என வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும்,
கால வளர்ச்சியும், சூழலியல் மாற்றங்களும் நில வகைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மதிப்பிட்டு, வசிப்பிடமாக மாறியுள்ள நிலங்களை வகை மாற்றம் செய்து, குடியிருப்பவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும்,
இயற்கை தேவைக்கு இன்றியமையாத் தேவையான நிலங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு மாற்று வீடும், மறுவாழ்வு நிதியும் கொடுத்து , நிலத்தை கையகப்படுத்த வேண்டும்,உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாய தொழிலாளர்களில் 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் ரூ.3000/- நிபந்தைனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 10 அன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒருபகுதியாக இன்று பூதலூரில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.இராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.முகில், ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியன்,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.கார்த்திக்,கோவி.பெரியசாமி, எம்.சம்சுதீன், எம்.அய்யாராசு, ஜி.ஜெயபால், எ.இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கைகளை மனுவாக அளிக்கப்பப்பட்டது.