அந்தியூரில் பல்வேறு கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.
![அந்தியூரில் பல்வேறு கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. அந்தியூரில் பல்வேறு கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221011-WA0073.jpg)
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் மதவெறிக்கு எதிராக அக்டோபர் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது
இந்த மனித சங்கிலிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்
இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் நாகராஜா கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு செயலாளர் தேவராஜன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வடக்கு ஒன்றிய செயலாளர் உத்தர சாமி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் தினேஷ் குமார்,
ஈரோடு மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி செயலாளர் சனவாஸ் இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் ஹாத்திம்தாய் தமிழ் புலிகள் ஒன்றிய துணைச் செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
பேரணி அந்தியூர் பஸ் நிலையம் முன்பு இருந்து பர்கூர் ரோடு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்
இந்த மனித சங்கிலிக்கு இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அந்தியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.