போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், வணிகர்கள் குமுறல்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும்,
ஆளுங்கட்சியினரே தங்களுக்கு வேண்டியவர் பெயரில் வணிக கடைக்க ளுக்கான ஏலம் ௹பாய் இருபத்தி இரண்டு லட்சத்து பதினேழாயிரத்திற்கு எடுத்துள்ளதாகவும், இருபத்தைந்து லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை கட்டி, ஆழுங்கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களில்,
உறவினர் (ஆண்டிபட்டியைச் சேர்ந்த)ஒருவரே ஏலம் எடுத்துள்ளதாகவும், முறையான ஏலம் பற்றிய முழுமையான தகவல் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் போதிய தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், ஏலம் விடப்பட்டுள்ளதாகவும்,
நிரந்தரமான ஆணையாளர் யின்றி அவலநிலை தொடர்வதாகவும், போடிநாயக்கனூர் நகராட்சிற்கு ஆணையாளர் பொறுப்பு வகிக்கும் நகராட்சிப் பொறியாளரை உடனடியாக, பொறுப்புப் பணியிலிருந்து விடுவித்து,
தமிழக அரசிற்கு இழப்பு ஏற்படா வண்ணம் நிரந்தர ஆணையாளரை முறையாக, விரைவாக, நியமித்திட தமிழக அரசும், தேனி மாவட்ட நிர்வாகமும் துரித நடவடிக்கை மேற்கொண்டிட முன்வர வேண்டும் என்பதே, நகர்மன்ற உறுப்பினர்களில் சிலர், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும்,
எதிர்பார்ப்பாகவும், கருத்தாகவும் உள்ளது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையும், தேனி மாவட்ட நிர்வாகமும், போடிநாயக்கனூர் நகராட்சியில் தற்போது நடைபெற்றுள்ள வணிக கடைகளுக்கான ஏல நடவடிக்கை,
தமிழக அரசிற்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறதா? என்பதை விரைந்து ஆய்வு மேற்கொண்டிட வேண்டும் என்றும், ஆளுங்கட்சியைச் சார்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரே, நகர்மன்றத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளதாகவும்,
பல்வேறு தொழில்களில் தனது முதலீட்டினை தனக்கு வேண்டியவர் பெயரில் முதலீடு செய்து, அரசிற்கு தான் கூடுதலாக செலுத்தக்கூடிய வரி விதிப்பினை தவிர்த்து வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.