BREAKING NEWS

மானாமதுரை வட்டார அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆலோசனைகுழு கூட்டம் நடைபெற்றது.

மானாமதுரை வட்டார அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆலோசனைகுழு கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் வி. ராஜா.

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைகுழு கூட்டம் நடைபெற்றது.

 

இதில் மானாமதுரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜ. இரவிசங்கர் அவர்கள் தலைமையேற்று அட்மா திட்டத்தின் செயல்பாட்டுகளை மற்றும் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை முதல் தவணையில் மானாமதுரை வட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள,

 

மாவட்ட விவசாயிகள் கண்டுணர்வு பயணம் வெளி மாநில விவசாயிகள் பட்டறிவு,  பயணம், செயல் விளக்கங்கள் போன்ற நிதி இழக்கீடுகளை துறைகள் வாரியாக வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்களும் தெரிவித்தார் மேலும் கலைஞர் திட்டம் முதலமைச்சர் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் தரிசு நில மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

 

துணை வேளாண்மை அலுவலர் திரு.சப்பாணீமுத்து பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி விரிவாக எடுத்துரைத்தார் கால்நடை துறையின் கீழ் கால்நடை ஆய்வாளர் கலந்துகொண்டு தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

 

தோட்டக்கலைத் துறையினர் உதவி தோட்டக்கலை அலுவலர் திரு.வெங்கடேஷ் பிரசாத் கலந்து கொண்டு தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

 

வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறையின் கீழ் உதவி வேளாண்மை அலுவலர் கலந்து கொண்டு விற்பனை மற்றும் மதிப்பீட்டுதல் விற்பனை செய்யும் யுத்திகள் பற்றி எடுத்துக் கூறினார்.

 

இக்கூட்டத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டத் தலைவர் திரு. அண்ணாத்துரை அவர்களும் மற்றும் 24 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி க.அமிர்தலட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மு. பாலமுருகன் அ.சதீஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )