BREAKING NEWS

நெல் ரகங்களை நடவு செய்து, பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்ற நோக்கத்தில் பள்ளி மாணவர்களே நெல் நடவில் ஈடுபட்டனர்; உணவுப் பொருட்களை வீணாக்கமாட்டோம் என உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

நெல் ரகங்களை நடவு செய்து, பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்ற நோக்கத்தில் பள்ளி மாணவர்களே நெல் நடவில் ஈடுபட்டனர்; உணவுப் பொருட்களை வீணாக்கமாட்டோம் என உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

தஞ்சாவூர்,

விவசாயி எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பதை நேரில் தெரிந்து கொள்ளும் விதமாகவும், பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்து, பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என்ற நோக்கத்தில் பள்ளி மாணவர்களே நெல் நடவில் ஈடுபட்டனர்.

 

 

மேலும், உணவுப் பொருட்களை வீணாக்கமாட்டோம் எனவும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

 

 

தஞ்சாவூர் அருகே கருப்பட்டிபட்டி கிராமத்தில் இன்று “விதையால் ஆயுதம் செய்” -விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் உலக உணவு தினத்தையொட்டி மாணவர்களுக்கு நெல் நடவு விழா நடைபெற்றது.

 

 

ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திலிருந்து மாணவ, மாணவிகள் ஊர்வலமாக அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்றனர். 

 

 

அங்கு விவசாயி தவச்செல்வனின் வயலில் பாரம்பரிய நெல் ரகமான “தங்கச்சம்பா” நெல் நாற்று பயிர்களை நடவு செய்தனர்.

 

 

இதில் எப்படி நெல் நடவு செய்யப்படுகிறது. நாற்று எத்தனை நாள், அறுவடை காலம் எவ்வளவு நாள், களை எடுப்பது போன்ற விவரங்களையும், விவசாயிகள் எப்படி எல்லாம் வயலில் கஷ்டப்படுகிறார்கள்,

 

 

எனவே அவர்களை வியர்வை சிந்தி உற்பத்தி செய்யும் உணவு தாணியங்களை நாம் வீணாக்ககூடாது எனவும், நெல் சாகுபடி, அறுவடை குறித்து பல தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

 

 

தொடர்ந்து உணவுப் பொருட்களை வீணாக்கமாட்டோம் என விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

இதற்கான ஏற்பாடுகளை இயற்கை விவசாயி தவச்செல்வன் மற்றும் கிராம விவசாயிகள் இணைந்து செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )