திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ பி நந்தகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத் தலைவர் தி அ முகமது சகி. பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.ஞானசேகர், வி.எஸ். விஜய், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன், மாநகர மேயர் சுஜாதா ஆனந்த், மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்,பி ஏழுமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மார்த்தாண்டன், வேலூர் ஒன்றிய செயலாளர் சி,எல் ஞானசேகரன்,
மாவட்டத்தைச் சேர்ந்த மாநகர, நகர பேரூராட்சி, கிராம கிளைகளைச் சார்ந்த ஏராளமான இளைஞர் அணியினர் தொண்டர் அணியினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசே ஒன்றிய அரசே திணிக்காதே திணிக்காதே தமிழ்நாட்டில் இந்தியை திணிக்காதே.. ரத்து செய், ரத்து செய், ஒரே நுழைவுத் தேர்வு ரத்து செய்.. போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.