திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சை வடக்கு, மத்திய, தெற்கு மாவட்ட இளைஞரணி மாணவர் அணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டம்.
ஒரே மொழி ஒரே நுழைவுத் தேர்வு என்னும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தஞ்சை வடக்கு தெற்கு மத்திய மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாணவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி இரா.தெட்சிணாமூர்த்தி தலைமையில், தஞ்சை மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், தஞ்சை மாநகர மேயருமான சண்.இராமநாதன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதி.ராஜேஷ், வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் க.செந்தில்குமார் மற்றும் மத்திய மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பழனிமாணிக்கம், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன்,
தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம், முன்னாள் அமைச்சர் எஸ்.என். எம்.உபயத்துல்லா, கும்பகோணம் மாநகர செயலாளரும் துணை மேயருமான சு.ப.தமிழழகன், தஞ்சை மாநகர துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.