தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் நான்காவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் நான்காவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 9 தாலுக்காவிலிருந்து 33 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இப்பயிற்சி 08.10.22 முதல் 19.10.22 வரை 12 நாட்கள் நடைபெறும். தினசரி மாநில அளவில் சிறந்த பயிற்சியாளர்கள் கொண்டு பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் இன்று மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாட்டின் தலைசிறந்த பேரிடர் மீட்பாளர்களில் ஒருவரான திரு. மரிய மைக்கேல் அவர்கள் கயிறு மூலம் மீட்கும் பல்வேறு விதமான பயிற்சிகளை ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. மனோ பிரசன்னா, மாவட்ட பேரிடர் வட்டாட்சியர் திருமதி. இராஜேஸ்வரி ரெட்கிராஸ் மாவட்ட சேர்மன் திரு. இராஜமாணிக்கம் பொருளாளர் பொறியாளர். முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.