கோவில்பட்டி அருகே புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டாரங்குளம் பஞ்சாயத்து சரவணாபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றிய அமைக்க கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து.
இரண்டு மின்மாற்றிகளை அமைப்பதற்கு சுமார் 9 லட்சம் மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து சுமார் 150 குடியிருப்புகளில் சீரான மின்சாரம் வழங்கும் வகைபில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
கோவில்பட்டி செயற் பொறியாளர் சகர்பான், உதவி செயற் பொறியாளர்கள் மிகாவேல், குருசாமி, முனியசாமி, பொன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.