BREAKING NEWS

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். அறிவுறுத்தல்

 

 

24 மணி நேரம் இயங்கி வரும் இலவச அழைப்பு எண்கள் மூலம் மழை. வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். 

 

 

காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

 

 

அணையின் பாதுகாப்பு கருதி வருகின்ற தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

 

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மற்றும் தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்த உடன் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் திருப்பி விடப்படுகிறது.

 

 

கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் கால்நடைகளை குளிப்பாட்டவும் மேய்ச்சலுக்கு ஆற்றில் ஓட்டிச் செல்லக்கூடாது என்றும்,

 

 

ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ நீச்சல் அடிக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

 

 

பொது மக்களுக்கு அறிவுறுத்தல். மேலும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் சுழற்சி முறையில் இயங்கி வரும் இலவச அழைப்பு எண் – 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114 – 04362-264115 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு மழை. வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். என அறிவுறுத்தல்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )