51-வது ஆண்டு தொடக்க விழா: தஞ்சையில் அ.தி.மு.க சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,
அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொன்விழா நிறைவு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு வந்தடைந்தனர்.

பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம் தலைமையில் அம்மா பேரவை இணை செயலாளர் காந்தி முன்னிலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிக்கல்சன் வங்கி தலைவர் சரவணன், மாவட்ட அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம்,

அம்மா பேரவை துணை செயலாளர் பாலை ரவி , மாணவர் அணி முருகேசன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், காந்திமதி , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர் , முன்னாள் நகர செயலாளர் முருகேசன், 51-வது வட்டச் செயலாளர் மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
