முதியோர் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு_கொடுக்கும் இயக்கம்..
விருதுநகர் மாவட்டம், முதியோர் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
நகரத் தலைவர் மைதிலி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் தெய்வானை மாவட்டத் துணைத் தலைவர் சஞ்சீவி நாச்சியார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
முடிவில் வீட்டுமனை பட்டா முதியோர் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைக்காக 70 மனுக்கள் வட்டாட்சியரிடம் வழங்கப்பட்டது.
CATEGORIES விருதுநகர்