போடி நகராட்சி ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி கொண்டு நமது குப்பை நமது பொறுப்பு நமது நகரம் தூய்மையான நகரம் என உள்ளிட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செய்தியாளர்: மு.பிரதீப்
தேனி மாவட்டம் போடியில் போடி நகராட்சி சார்பில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பொதுமக்கள் இரண்டையும் பிரித்து தரும் வண்ணம் தூய்மையின் இரு வண்ணம் என்னும் தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி நகராட்சி சார்பில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுகளில் கொட்டப்படும் குப்பைகளை இரு பெட்டிக்காலாக பிரித்து பச்சை வண்ண குப்பைத் தொட்டியில் மக்கும் குப்பையும் சிவப்பு வண்ண குப்பை தொட்டியில் மக்காத குப்பையும் பொதுமக்கள் போட வேண்டும் என்றும்,
அவ்வாறு சிறப்பாக செய்யும் பொது மக்களுக்கும் குடும்பத்தாருக்கும் நகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்படும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி அவ்வாறு தரம் வாரியாக பிரித்து தருவதன் மூலமாக இயற்கை வளம் பாதுகாக்கப்படும் என்பதன் நோக்கத்தின் அடிப்படையில்,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் போடி நகர மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் மற்றும் போடி நகராட்சி பொறுப்பாளர் செல்வராணி தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம் மற்றும் மாடாட்டம் நாட்டுப்புற கலைகளோடு விழிப்புணர்வு போடி காமராஜர் சாலை வழியாக நடத்தப்பட்டது இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு,
நகராட்சி ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி கொண்டு நமது குப்பை நமது பொறுப்பு நமது நகரம் தூய்மையான நகரம் என உள்ளிட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஊர்வலமாகச் சென்றனர்.
