ஒரு கிராமமே தத்தளிக்கும் அவலநிலை கிராம மக்களின் குமுறல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
திருச்சுழி தாலுகாவில் உள்ள படைதிரட்டி சிங்கநாதபுரம் கிராமத்தை அதிகாரிகள் ஒதுக்குகிறார்கள் என பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு..
கரி மூட்டம் புகையினால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறிய சோகம்.
கால்நடைகள் பருகும் தண்ணீர் நிறம் மாறி உள்ளதால் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் அச்சத்துடன் தத்தளிக்கும் கிராமம்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவில் படைதிரட்டி சிங்க நாதபுரம் என்ற கிராமம்
இந்த கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மானாமதுரையில் இருந்து திருச்சுழி செல்லும் வழியில் தர்மம் கிராமத்திற்கு அருகில் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை படுமோசமாக மண் சாலையாகவும் உள்ளதால் மழை நேரங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் அடிப்படை தேவைகளுக்காக செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடல்நிலை பாதிக்கப் பட்டாலும் 108 ஆம்புலன்ஸ் கிராமத்துக்கு வர மறுக்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இறந்தவர்களை சடலங்களை தோளில் சுமந்து கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுமட்டுமின்றி குடிநீர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை வருவதாகவும் இப்பகுதியில் தொடர்ச்சியாக செயல்பட்டுவரும் கரிமூட்டம் புகையால் ஆஸ்த்மா நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு மாற்றுத்திறனாளியின் குடும்பம் கிராமத்தைவிட்டு வெளியேறியதாக சோகத்துடன் தெரிவித்தனர்.
இந்த கிராமத்தில் மேலும் ஒருவருக்கு ஆஸ்மா நோய் அவதிப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்த கிராமத்திற்கு சாலை வசதி குடிநீர் வசதி காற்றுமாசுபாடு தண்ணீர் மாசுபாடு தட்டுபாடு என இவ்வளவு குறைபாடுகள் இருந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தங்களை கிராமத்தை ஒதுக்கி வைப்பதாக பரப்பான குற்றச்சாட்டி வருகின்றனர்.
இப்பகுதியுள்ள கிராம மக்களளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவ முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்களும் ரஇப்பகுதி உள்ள கிராம மக்களும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.