மருத்துவ நுழைவு தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த கவுந்தப்பாடி மாணவி தேவதர்ஷினிக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியம் கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தேவதர்ஷினி என்ற மாணவி மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநிலத்தில் முதலிடம் பெற்று தேர்வானார்.
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பவானி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பி. துரைராஜ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சென்னியப்பன் மேற்படி மாணவியை பாராட்டி மாணவிக்கு ரொக்கப்பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினர்.
உடன் பவானி ஒன்றிய கழக நிர்வாகிகள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவைச் சேர்ந்தவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரிய ஆசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டு பாராட்டினர்.
CATEGORIES ஈரோடு