அந்தியூரில் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை மூலம் விளக்கினர் மேலும் மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தீ எளிதில் பற்றக்கூடிய பொருட்களை பட்டாசு அருகில் வைக்கக்கூடாது எனவும் பட்டாசு கொளுத்தும் பொழுது ஒரு பக்கெட்டில் தண்ணீர் அல்லது மணல் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி பானுமதி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆசிரியை ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.