அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக அரசு கைது செய்ததை கண்டித்து தஞ்சை அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
சென்னையில் சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருந்த நிலையில்,
காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது போலீசார் பொய் வழக்கு போட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் கழக உறுப்பினர்களையும் கைது செய்தியை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தஞ்சை ரயில் நிலையத்தில் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துறை திருஞானம் நிக்கெல்சன் வங்கி தலைவர் சரவணன் முன்னாள் தஞ்சை மேயர் சவுத்ரி கோபால் கழக எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கைது செய்ததை கண்டித்தும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்,.
அவர் மீது போட்ட பொய் வழக்குகளை உடனடியாக தமிழக அரசு வாபஸ் வாங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் ஈடுபட்டனர் இப்போது காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.