தஞ்சாவூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, 27 அணிகள் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி தொடங்கியது இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் 17 வயதுக்கு உட்பட்டோர் 19 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதில் மாவட்டம் முழுவதும் 27 அணிகள் பங்கு பெற்றுள்ளன இப்போட்டியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானார் கலந்து கொண்டு தங்களது விளையாட்டு திறனை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்கேன் பால் போட்டிகைப்பந்து போட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்