BREAKING NEWS

பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையில் ரூ.13.50 கோடி இரண்டாம் தவணை வழங்கினர் விவசாயிகள் மகிழ்ச்சி.

பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையில் ரூ.13.50 கோடி இரண்டாம் தவணை வழங்கினர் விவசாயிகள் மகிழ்ச்சி.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையில் ரூ.13.50 கோடி இரண்டாம் தவணை வழங்கல்.

 

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய உத்தரவால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ரூ.45 கோடி நிலுவைத் தொகையில் இரண்டாம் தவணையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

திருப்பனந்தாள் அருகே கஞ்சனூர் தனியார் சர்க்கரை ஆலைக்காக பயிரிடப்பட்ட கரும்புகளை ஆலை நிர்வாகத்தின் ஒப்புதலோடு திருமண்டக்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புகளுக்கு,

 

நிலுவைத் தொகையை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு சார்பில் கடந்த ஐந்து வருட மாக போராடி தற்போது நீதிமன்றம் மூலம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் தீர்வு பெற்றனர். 

 

இந்த உத்தரவின்படி கலைப்பு அதிகாரி நியமனம் செய்த தீர்ப்பாயம் திவால் விதிகளின்படி பணப் புழக்க விதிமுறைகளுடன் ஒரு சமரசம் ஏற்பாடு திட்டம் பெறப்பட்டது. விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ. 78.48 கோடி இருந்தது கடன் தீர்வு திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 57 சதவீத தீர்வு தொகையான..,

 

 

ரூ.45.01 கோடியை ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனியார் நிறுவனம் ஒரு வருட காலத்திற்குள் நான்கு தவணைகளில் செலுத்தப்பட வேண்டும் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது.

 

இந்த நிலையில் கலைப்பு கமிட்டி செயலாளர் ராமகிருஷ்ணன் சதா சிவனை பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் தலைமையில் குழு சந்தித்து இரண்டாம் தவணை நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் இரண்டாம் தொகை நிலுவை தொகையான ரூ.13.50 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )