தஞ்சை மாவட்டத்தில் கனமழை ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்து வருகிறது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம்,
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் செய்து வரும் கனமழையினால் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் திருவையாறு கும்பகோணம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை என மாவட்ட முழுவதும் இன்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் குறுவை நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தி கொள்முதல் செய்தால்தான் அறுவடை செய்ததில்லை விற்க முடியும் இல்லையென்றால் மழையில் நனைந்து இந்த ஆண்டு தீபாவளி கலையிழந்து போய்விடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்