தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் தீவிரம் காட்டும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் நகராட்சி.

தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் வேலூர் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக முதல்வர் பல விழிப்புணர்வுகளை மேற்கொண்ட போதும் அதன் பயன்பாடானது தொடர்கிறது பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில்,
வேலூர் மாநகராட்சி 2 வது மண்டலம் உட்பட்ட சத்துவாச்சாரி. மெயின் பஜார். நேதாஜி மார்க்கெட் லாங்கு பஜார் ஆகிய பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சௌந்தர்யா தலைமையில் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேற்கு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சுமார்50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள். டம்ளர்கள் என50 கிலோ கைப்பற்றப்பட்டன. பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூபாய்₹8 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சௌந்தர்யா கடந்த மூன்று நாட்களாக வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பேர்ணாம்பட் போன்ற நகராட்சிகளில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.