தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையினால் நெல்மணிகள் நனைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது அதிகபட்சமாக தஞ்சையில் 6.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது இதனால் களிமேடு உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் சாலைகளிலும் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள குறுவை அறுவடை நெல்மணிகள் மழையில் நனைந்து உள்ளது.
தார்பாய்கள் கொண்டு விவசாயிகள் மூடி வைத்தாலும் சாலை ஓரங்களில் மழை நீர் வெள்ளம் போல் ஏங்கி உள்ளதால் நெல் குவியல்கள் முற்றிலுமாக நனைந்து விட்டது.
ஏற்கனவே 15 நாட்களாக பெய்த கன மழையினால் ஈரப்பதளவை 22 சதவீதமாக முயற்சி தரவேண்டும் என விவசாயிகள் வைத்த கோரிக்கையை எடுத்து டெல்டா மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்திய குழு இதுவரை ஆய்வு அறிக்கையை வெளியிடவில்லை,
மத்திய அரசும் வீரப்பதாளவை உயர்த்தவில்லை இந்நிலையில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் அறுவடை செய்த நல் மணிகள் வீணாகிவிடும் அறுவடை செய்யாத நெல்மணிகள் வயல்களில் தேங்கியுள்ளது.
இதனால் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரண வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி களி மேடு..