கவினா சி.பி.எஸ்.சி பள்ளி மாணவிகள் 3 தங்க பதக்கம் வென்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி.
தென் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் கவினா சி.பி.எஸ்.சி இண்டர் நேஷனல் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தங்கபதக்கம் வென்று மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே பாம்பூர் கவினா இண்டர் நேஷனல் (சிபிஎஸ்சி) பள்ளியில் தென் மாவட்ட ஐந்தாவது குறு வட்டார அளவிலான சிபிஎஸ்சி பள்ளி மாணவ,மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது.
நீச்சல் போட்டியில் 12, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட நான்கு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியினை தென் பொதுவக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பி. இளமுருகு இளஞ்செழியன் குத்துவிளக்கேற்றி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பள்ளியின் நிறுவுனர் கண்ணதாசன் பாண்டியன், தாளாளர் ஹேமலதா கண்ணதாசன், விளாக்குகளதூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆர்.பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் சுமிசுதிர் அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார்.
போட்டியில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இதில் கவினா பள்ளியைச் சேர்ந்த 12 வயது பிரிவு மாணவி ஹேம தர்ஷினி,14 வயது பிரிவு சுரேகா ,17 வயது பிரிவு ஜோஷிதா ஆகியோர் முதலிடம் பெற்று 3 தங்கப் பதக்கங்களை பெற்றனர்.
மேலும் அப்பள்ளி மாணவ,மாணவியர்கள் 13 சில்வர் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களை வென்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்கள் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ,மாணவிகளையும் , நீச்சல் பயிற்சியாளர்கள் விஜயேந்திரன், சரவணன், உடற்கல்வி ஆசிரியை சத்யா ஆகியோரை ஆசிரியர்களும், பள்ளியின் நிர்வாகத்தினரும், பொது மக்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
முதுகுளத்தூர், புகைப்படம். தென் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்ற கவினா சி.பி.எஸ்.சி இண்டர் நேஷனல் பள்ளி மாணவ,மாணவிகளை வெள்ளிக்கிழமை பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.