தஞ்சையில் மல்லிகை முல்லை பூக்கள் கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனை; பூ வியாபாரிகள் மகிழ்ச்சி

தஞ்சையில் மல்லிகை முல்லை பூக்கள் கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது பூக்களின் வரத்து குறைவாக இருந்தாலும் தீபாவளி வியாபாரம் நன்றாக உள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் புத்தாடைகள் பட்டாசு இனிப்பு வகைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது இந்நிலையில் தீபாவளி ஒட்டி பூக்கள் வாங்க தஞ்சாவூர் பூ மார்க்கெட்டில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
மல்லிகைப்பூ ஒரு கிலோ 1500 ரூபாய்க்கும் முல்லை பூ ஒரு கிலோ 1500 ரூபாய்க்கும் கனகாம்பரம் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது செவ்வந்தி பூ கிளை 200 செவ்வந்தி பூ கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது பூக்களின் வரத்து குறைவாக இருந்தாலும் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்