தேனி மாவட்டம் போடியில் கேட்பாரற்றுக் கிடந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அதிகாரி.
போடி செய்தியாளர் : மு.பிரதீப்
தேனி மாவட்டம் போடி வடக்கு தெரு செல்லாயி அம்மன் கோவிலில் அருகில் 600 கிலோ ரேஷன் அரிசிகளை மூடைகளாக தைத்து ஆள் நடமாட்டம் இல்லாத சந்துப் பகுதியில் அடுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அதிகாரியான ராமராஜருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் செல்லாயி அம்மன் கோயில் அருகில் சென்ற பொழுது பொது மக்களுக்காக வினியோகம் செய்வதற்காக வழங்கப்படும்.
இலவச ரேஷன் அரிசியை மூட்டைகளாக தைத்து அதனை விற்பனைக்காகவும் அண்டை மாநிலம் கேரளாவிற்கு ரகசியமாக இரவு நேரங்களில் கடத்துவதற்காக வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் ராமராஜ் கைப்பற்றினார்.
இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்து ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக விற்பனைக்காகவும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்த இருக்கும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை பத்திரமாக மீட்டு உணவு தானியக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான இப் பகுதியில் 600 கிலோ ரேஷன் அரிசியை வைத்த மர்ம நபர்கள் யார் என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
இது தொடர்பாக தற்போது காவல்துறை தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர் விரைவில் குற்றவாளிகள் பிடி படுவார்கள் என காவல்துறை தெரிவித்து வருகின்றனர்.