தஞ்சாவூர் அருகே நண்பனை கொலை செய்த 5 பேர் கைது.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் பொந்தேரிபாளையம் கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (36). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கங்கா நகர் பகுதியில் நேற்றிரவு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அரிவாளால் வெட்டிக் கொடூருமாக கொலை செய்யப்பட்டார்.
தகவலறிந்த கள்ளப்பெம்பூர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், சுவாமிநாதனின் அண்ணன் விஜய் இரு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.
தனது அண்ணனை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்குவதற்காக சுவாமிநாதன் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த எதிர் தரப்பினர், சுவாமிநாதனின் நெருங்கிய நண்பர்களை வைத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்த சுவாமிநாதனை அவரது நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர் வெளியே அழைத்துள்ளனர். நண்பர்கள் அழைக்கிறார்கள் என்று வெளியே வந்த சுவாமிநாதனை வீட்டுக்கு அருகில் வைத்து கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் சுவாமிநாதனை கொலை செய்த அவரது நண்பர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.பின்னர் நண்பனை கொன்ற 5 பேரை பிடித்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.