கும்பகோணம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அடிப்படை வசதி கேட்டு இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டிடங்களை சீரமைத்து தர கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் பிரதீப் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் ராகுல் நகர குழு உறுப்பினர் ஜேம்ஸ் மற்றும் விடுதி மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விடுதி மாணவர்களின் அடிப்படை வசதிகளை விடுதியில் செய்து தர பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை செய்யாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கும்பகோணம் சரக டிஎஸ்பி அசோகன் மாணவர்களிடம் சம்பந்தப்பட்ட துறையுடன் பேசி உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார் அதன் தொடர்ச்சியாக தற்காலிகமாக போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும் உடனடியாக கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட விடாவிட்டால் ஒட்டுமொத்த கல்லூரிகளில் உள்ள மாணவர்களை திரட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.