பொறையாரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் புதிய பேருந்து நிலையம் சமுதாயக்கூடத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமை வகித்தார். விநாயகர் மெஷின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் அம்புஜம், பொறையார் ரோட்டரி சங்க தலைவர் சக்தி மணிகண்டன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் லூர்து பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அதைத்தொடர்ந்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் இயங்கும் நடமாடும் மருத்துவ உதவி பேருந்தை பார்வையிட்டு பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளது, என்னென்ன சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முகாமில் சக்கரை நோய், ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, மூட்டு எலும்பு கிச்சை, சிறுநீரக பிரச்சனை, மார்பக புற்றுநோய் கண்டறிதல் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிதல் ஆகியவற்றுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல் மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக் மற்றும் விநாயக மிஷின் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள், பொறையார் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க மண்டல பொறுப்பாளரும், மாவட்ட திமுக பிரதிநிதியுமான சடகோபன் நன்றி உரையாற்றினார்.