BREAKING NEWS

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை சாதி பற்றிப் பேசி அடித்து துன்புறுத்தி தாக்கி வழக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான தீர்ப்பு.

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை சாதி பற்றிப் பேசி அடித்து துன்புறுத்தி தாக்கி வழக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பான தீர்ப்பு.

15 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பா என்ற விதவைப் பெண்ணை அடித்து துன்புறுத்தி தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்தி சாதியை பற்றி பேசிய அப்போதைய புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரும்,

 

தற்போது ஏடிஎஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற வருமான விமல் காந்த் மற்றும் அப்போதைய உதவி ஆய்வாளரும் தற்போதைய பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளருமான காந்திமதி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

 

தண்டனை விபரம் 12 மணிக்கு கூருவதாக நீதிபதி சுவாமிநாதன் அறிவிப்பு தூத்துக்குடியில் பரபரப்பு

 

தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பாப்பா இவரை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச் சென்ற புளியம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் அங்கு அவரை சாதியின் பெயரை சொல்லி திட்டி அடித்து துன்புறுத்தி கொடுங்காயம் ஏற்படுத்தி உள்ளனர்.

 

 இதுகுறித்து பாதிக்கப்பட்ட விதவைப்பெண் பாப்பா தனியாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு தூத்துக்குடி போகோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது.

 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் விமல் காந்த் மற்றும் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது

 

 

 இந்த நிலையில் 15 வருடங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்திருந்தார் இதன்படி இன்று காலை பத்து முப்பது மணி அளவில் நீதிபதி சுவாமிநாதன் அப்போதைய காவல் ஆய்வாளராக இருந்து ..

 

அதன்பிறகு உதவி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற விமல் காந்த் மற்றும் அப்போதைய உதவி ஆய்வாளர் காந்திமதி தற்போது பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் காந்திமதி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்

 

 மேலும் 12 மணிக்கு தண்டனை விபரம் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார் இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் தீர்ப்பை தனது கையாலே எழுதி கோர்ட் குமாஸ்தா மூலம் தண்டனை விவரம் வாசிக்கப்பட்டது

 

 அதில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்த அப்போதைய ஆய்வாளர் மற்றும் அப்போதைய உதவியாளர் இருவரும் குற்றவாளிகள் எனவும் இருவருக்கும் கொடுங்காயம் விளைவித்தல் ஏற்படுத்திய குற்றத்திற்காக தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

இந்த 25000 வீதம் இரண்டு பேரிடமும் அபராதமாக வசூலிக்கப்படும் 50 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட விதவைப் பெண் பாப்பாவுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

 சாதியைப் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டாலும் கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கில் இருவருக்கும் தண்டனையும் அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 ஏற்கனவே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நிறைவேறிய மாவட்டத்தில் தற்போது காவல்துறைக்கு எதிராக நீதிபதி வழங்கிய தீர்ப்பு தூத்துக்குடி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )