ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக நாடார் மகாஜன சங்க தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம்,
எர்ணாவூர் நாராயணன் தலைமையில் ஒருங்கிணைந்த நாடார் மகாஜன சங்க தேர்தலில் போட்டியிடும் என். ஆர்.தனபாலன் அணிக்கு ஆதரவு அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் சார்பாக நாடார் மகாஜன சங்க தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாடார் பேரவை மாநில துணைத் தலைவர் டாக்டர் தர்மதுரை தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.நாகராஜன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சுப்புராஜ், துணைச் செயலாளர் பாஸ்கரன் பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தலில் போட்டியிடும் கும்பகோணம் வேட்பாளர்கள் தர்மராஜ், சுப்ரமணியன், ஆகியோரை அறிமுகப்படுத்தி, என்.ஆர்.தனபாலன் தலைமை உரை ஆற்றினார்.
அனைத்து உறவின்முறை நிர்வாகிகளும், ஒருங்கிணைந்த நாடார்கள் சங்க ஆதரவு பெற்ற என்.ஆர்.தனபாலன் அணிக்கு மூன்று பனைமர சின்னத்திற்கு வாக்களித்து.,
வெற்றி பெறசெய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்டத் தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.