தரங்கம்பாடி அருகே சமூக வலைதள நண்பர்கள், வீடில்லா மூதாட்டிக்கு ரூ 20,000 மதிப்பீட்டில் குடில் அமைத்து கொடுக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திடீர்குப்பம் காமராஜர் சாலை பின்புறம் வசிக்கும்,
அபூர்வம், க/பெ.சுப்பிரமணியன் என்ற மூதாட்டியின் சிதலமடைந்த குடிசைவீட்டினை தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், வலைதள நண்பர்கள் உதவியுடன் குடில் சீர்அமைத்து கொடுத்தனர்.
உறைவிடம் உறுதிபடுத்தும் உன்னத திட்டம் என்ற திட்டத்தை ஏற்படுத்தி சிதலமடைந்த குடிசைகளை புதுப்பித்து வரும் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் தரங்கை தாலுக்கா சங்கபொருளாளரும் பொது தொழிலாளர் சங்க தரங்கை பொறுப்பாளரும், மு.பேரூராட்சி கவுன்சிலருமான மாணிக்க. அருண்குமாரிடம் சமூக ஆர்வலர் ரஜினிமுருகன் தொடர்பு கொண்டு அபூர்வம் வீட்டினை சீர்செய்து தர கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் தமிழக ஹயர்கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் தரங்கை தாலூக்கா பொறுப்பாளர்கள், பொதுதொழிலாளர் சங்கத்தினர் மற்றும் ராஜேஸ்வரி, கால்நடை மருத்துவர் பாபு, ஆசிரியை மீனாட்சி, ஆர்.எஸ்.பி என்டர்பிரைசஸ் உரிமையாளர் செந்தில் வேல் குமரன், சிங்கப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட சமூக வலைதள நண்பர்கள், பங்களிப்போடு ரூ. 20,000 மதிப்பீட்டில் அபூர்வத்திற்கு குடில் அமைத்து கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழக ஹயர்கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் தரங்கை தாலூக்கா துணைத்தலைவர் குமார், பொதுதொழிலாளர் சங்க உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் வாயிலாக மாணிக்க.அருண்குமார் அமைத்துக்கொடுக்கும் 5 வது குடில் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய குடிலில் அமர்த்தப்பட்ட மூதாட்டி அபூர்வம் அம்மையார்,
குடில் அமைத்துகொடுத்த மாணிக்க அருண்குமாருக்கும், தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் தரங்கை தாலூக்கா பொறுப்பாளர்களுக்கும், பொது தொழிலாளர் சங்கத்தினருக்கும், சமூக வலைதள நண்பர்களுக்கும்,
சமூக ஆர்வலர் ரஜினி முருகனுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.