ஆண்களுக்கான மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா : சக்தி விநாயகம் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ஆண்களுக்கான கடலூர் வருவாய் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி துவக்க விழா ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்டத்தில் சுமார் 10 குரு வட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கல்வி நிறுவனங்களின் இப்போட்டியில் பங்குபெற்றனர்.
இதன் துவக்க விழா நிகழ்ச்சி ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது., இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா, தலைமை தாங்கினார். ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர். புனிதவதி, அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவிநாயகம் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் நகைச்சுவையாகவும் எதார்த்தமாகவும் வாழ்த்தி பேசினார்.
அதன் பின்பு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் கைகளைக் குலுக்கி வெற்றி பெற வாழ்த்துச் சொல்லி பின்னர் போட்டியினை துவக்கி வைத்தார்.
இத்துவக்க விழாவில் ஐயப்பா மற்றும் ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் செயலர் பெருஞ்சித்திரன்,
பள்ளியின் ஆசிரியர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் செல்வகுமார், செல்வம், காந்தி, திட்டக்குடி, விருதாச்சலம், குறுவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்பையன், அருள், செந்தில்குமார், பிரகாசம், பன்னீர்செல்வம், கருணாநிதி, பாலமுருகன், அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.