முதுகுளத்தூர் காத்தாகுளம் ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ஊராட்சியில் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ஊராட்சியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 29ந்தேதி முதல் நவ 4ந்தேதி வரை 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. முகாமிற்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், முதுகுளத்தூர் பேரூராட்சி மன்றத்தலைவர் அ.ஷாஜஹான் தலைமை தாங்கினார்.
காத்தாகுளம் ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி புயல்நாதன், துணைத்தலைவர் புயல்நாதன், கிராம தலைவர் லெட்சுமணன், ஜமாத் தலைவர் செ.முகம்மது இக்பால், கல்விக்குழுத்தலைவர் அ. காதர் முகைதீன், காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கு.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் என்.நாகரஞ்சித் மருத்துவ ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹெ.மு முகம்மது சுல்த்தான் அலாவூதீன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் காஜாநிஜாமுதீன் குரைசி, ஜாகிர் உசேன் ,ஆசிரியர்கள் சகுபர் அலி, பரமேஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் கமால் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் நன்றியுரை வழங்கினர். நிகழ்ச்சியினை தொடர்ந்து பள்ளியின் வளாகம் அருகில் மரம் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதே போன்று மு.தூரியில் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் சார்பில் உழவாரப் பணி நடைபெற்றது.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 2}ம் நாள் சிறப்பு முகாம் மு.தூரிதேவர்நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.முகாமுக்கு பள்ளி தலைமைஆசிரியர் கே.சந்தான வேலு தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் என்.மங்களநாதன் அனைவரையும் வரவேற்றார்.
என்.எஸ்.எஸ். மாணவர்கள்கலந்து கொண்டு பள்ளி, தெருக்கள், கோவில்களில் சுத்தம் செய்து உழவாரப் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் பி.பழனிவேல் நன்றி கூறினார்.